மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா மற்றும் பலர் நடித்த பாகுபலி 2 படம் சீனாவில் கடந்த 4ம் தேதி சுமார் 7000 தியேட்டர்களில் வெளியானது. மிகப் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் நடுத்தரமான வரவேற்பை இந்தப் படம் பெற்றுள்ளது.
முதல் நாளில் 2.41 மில்லியன் யுஎஸ் டாலர்களும், இரண்டாவது, மூன்றாவது நாட்களில் தலா 2.94, 2.26 மில்லியன் யுஎஸ் டாலர்களும் இந்தப் படம் வசூலித்துள்ளது. முதல் வார இறுதியில் மட்டும் மொத்தமாக 7.63 யுஎஸ் டாலர்களை பாகுபலி 2 வசூலித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 51 கோடி ரூபாய். இது சீனாவில் வெளியான இந்தியப் படங்களின் முதல் வார வசூலில் ஐந்தாவது இடமாகும்.
இதற்கு முன்பு சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படம் 27 மில்லியன் யுஎஸ் டாலர்களையும், ஹிந்தி மீடியும் 15.7, தங்கல் 13.7, பஜ்ரங்கி பைஜான் 8.4 மில்லியன் யுஎஸ் டாலர்களையும் வசூலித்துள்ளது.
சீனாவைப் பொறுத்தவரையில் பாகுபலி 2 100 கோடி வசூலைத் தாண்டினால் பெரிய விஷயம்.