ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பென்ஞ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் குறும்படங்களை ஒருங்கிணைத்து திரைப்படமாக வெளியிட்டு வந்தார். அதன் பிறகு படங்கள் தயாரித்தார், மேயாதமான், மெர்குரி படங்களை தயாரித்தார்.
தற்போது தனது ஸ்டோன் பென்ஞ் நிறுவனத்தின் மூலம் யூ டியூப்பில் வெளியிடும் வகையிலான காமெடி வீடியோக்கள், ஸ்கெட்ச் வீடியோக்கள், ஆவணப் படங்கள் தயாரிக்கிறார். அதோடு தற்போது பரவலாகி வரும் வெப் சீரியலும் தயாரிக்கிறார்.
முதல் வெப் சீரியலாக ஒரு முதியவரின் வாழ்க்கையை மையமாக கொண்ட கதையை தயாரிக்கிறார். இதில் கிரேஸி மோகன் நாடக குழுவில் பல ஆண்டுகளாக நடித்து வரும் சீனு அந்த முதியவராக நடிக்கிறார். யூ-டியூப் சேனல்கள் மூலம் புகழ்பெற்ற நடிகர், நடிகைகள் இதில் நடிக்கிறார்கள்.