பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தனுஷின் 'வுண்டர்பார் பிலிம்ஸ்' நிறுவன தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள ரஜினி, ஹுமா குரேஷி, நானா படேகர் நடித்துள்ள படம் 'காலா'. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இந்த படத்தின் 'செம வெயிட்டு... காலா சேட்' என்று துவங்கும் சிங்கிள் ட்ராக் சமீபத்தில் வெளியானது.
'காலா'வின் அனைத்து பாடல்களும் இம்மாதம் 9-ஆம் தேதி வெளியாகிறது. 'காலா' ஆடியோ வெளீயீட்டு விழா மிகப் பிரம்மாண்டமான முறையில் சென்னையிலுள்ள ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் வருகிற 9 ஆம் தேதி மாலை நடக்கவிருக்கிறது.
'காலா' இசை வெளியிட்டு விழாவை வீட்டிலிருந்தபடியே ரசிகர்கள் நேரடியாக கண்டு மகிழ்வதற்காக இந்த இசை வெளியீட்டு விழா நேரடியாக டுவிட்டர் பேஸ்புக், யு-ட்யூபில் ஒளிபரப்பப்பட இருக்கிறது.
இந்த விழாவை ஒளிபரப்பும் உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சி பெரிய தொகைக்கு வாங்கி இருப்பதால் மீடியாக்களின் கேமராக்களுக்கு அனுமதி இல்லையாம். அதே சமயம் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் அனுமதி உண்டு என்று சொல்லப்படுகிறது.