ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் |
பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வள்ளிகாந்த் இயக்கியுள்ள செம படத்தை பாண்டிராஜின் 'பசங்க புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், பி.ரவிச்சந்திரனின் 'லிங்க பைரவி' நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் குமார், கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் அர்த்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். பட பணிகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாரான நிலையில் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டது. அதன்காரணமாக செம படம் உட்பட பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.
சினிமா ஸ்டிரைக் முடிவடைந்ததை தொடர்ந்து வாரத்துக்கு நான்கு படங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் 'செம' படத்தை இம்மாதம் 25-ஆம் தேதி வெளியிட தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.
'செம' பட தயாரிப்புடன் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பாண்டிராஜ் இயக்கி வந்தார். இந்த படத்தின் வேலைகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால் 'கடைக்குட்டி சிங்கம்' படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.