கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் காலா. ஜூன் 7-ந் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் இசை வெளியீடு மே 9-ந்தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க சென்றிருந்த ரஜினி நேற்று மாலை சென்னை திரும்பி விட்டதால் காலா ஆடியோ விழாவில் அவரும் கலந்து கொள்கிறார். சமீபகாலமாக தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அனல் பறக்கும் அரசியலும் ரஜினி பேசி வருகிறார். அதனால் காலா ஆடியோ விழாவில் கலந்து கொள்ள ரஜினி ரசிகர் மன்றத்தினர் அதிக ஆர்வமாக உள்ளனர்.