அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஆங்கில சேனல்களிலும், வடமாநிலங்களிலும் பிரபலமாக திகழ்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் முதன்முறையாக சில மாதங்களுக்கு முன்னர் ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது சிறப்பு அம்சம்.
கடந்த சீசனில், ஓவியாவின் குறும்புத்தனம், ஆரவ் உடன் காதல், காயத்திரி ரகுராம் கெட்டவார்த்தை பேசியது, ஜல்லிக்கட்டு புகழ் ஜூலியின் நாடகத்தனம், சினேகனின் கட்டிப்பிடி என சுவாரஸ்யமும், சர்ச்சையுமாக நிகழ்ச்சி களை கட்டியது. போட்டியின் இறுதியில் ஆரவ் வெற்றி பெற்றார்.
இதன் இரண்டாவது சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்த முறை சூர்யா அல்லது அரவிந்த்சாமி இருவரில் ஒருவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதாக செய்திகள் வந்தன. பின்னர் கமலே தொடரப்போவதாக கூறப்பட்டது.
தற்போது கமலே சீசன் 2வையும் தொடர இருக்கிறார். சமீபத்தில் இதற்கான புரொமோஷன் சூட்டிங் நடந்துள்ளது. இதில் கமல் பங்கேற்று நடித்திருக்கிறார். விரைவில் இந்த புரொமோ வீடியோ ஒளிப்பரப்பாக இருக்கிறது. ஜூன் 17 முதல் பிக்பாஸ் 2 ஆரம்பமாகும் என தெரிகிறது.