'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் களம் இறங்க போவதாக அறிவித்துவிட்டார். அதற்கு முன்பாக மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நிர்வகித்து வருகிறார். அந்தப்பணியும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
தற்போது வழக்கமான உடல்பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ள ரஜினி, மே 5-ம் தேதி சென்னை திரும்புகிறார். தொடர்ந்து மே 9-ம் தேதி நடைபெறும் தனது காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார்.
இதையடுத்து தனது கட்சிக்கு தலைமை செயற்குழு உறுப்பினர்களை நியமிக்க இருக்கிறார். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களையும், ரசிகர்களையும் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு மே 25-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பேர் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்த பணிகளை மே மாதத்திற்குள் முடித்துவிட்டு, ஜூன் மாதத்தில் கார்த்திக் சுப்பராஜின் படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. இந்தப்படம் அரசியல் கலந்த கதையாக உருவாகிறது.