ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
மம்முட்டி தற்போது தெலுங்கில் 'யாத்ரா' என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் கேரக்டரில் நடிக்கிறார். மஹி ராகவ் இயக்குகிறார். தெனிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக இருக்கிறதாம்.
இந்தப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக, அதாவது ஒய்.எஸ்.ஆரின் மனைவி, ஒய்.எஸ்.விஜயாம்மாவாக நடிக்க முன்னணி நடிகைகள் பலரும் நடிப்பார்கள் என சொல்லப்பட்டு வந்த வேளையில், அந்த வாய்ப்பு பாகுபலி-2வில் நடித்த அஷ்ரிதாவுக்கு கிடைத்துள்ளது. இவர் பாகுபலி-2' படத்தில் அனுஷ்காவின் அண்ணியாக நடித்தவர் என்பது குறிபிடத்தக்கது.