இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன். மலையாளம், தமிழ், இந்தியில் 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். மோகன்லாலை வைத்து மட்டும் 20 படங்களுக்குமேல் இயக்கி உள்ளார். அவர் இயக்கிய படம் ஒன்று முதன் முதலாக தியேட்டரில் வெளியாகாமல் ஆன்லைனில் வெளியானது.
வணிக நோக்கம் இல்லாமல் விருதுக்காக அவர் இயக்கிய படம் சில சமையங்களில். பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன், வருண் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இளையராஜா இசை அமைத்திருக்கிறார் சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரபுதேவா ஸ்டூடியோ மற்றும் இயக்குனர் விஜய்யின் திங்க் பிக் ஸ்டூடியோ இவற்றுடன் இணைந்து ஐசரி கணேசன் தயாரித்துள்ளார்.
தனக்கு எய்ட்ஸ் நோய் வந்திருக்குமோ என்று சந்தேகம் கொள்கிற நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவனின் தவிப்புதான் படத்தின் கதை. அந்த கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். 90 நிமிடங்கள் மட்டுமே ஓடும் சிறப்பு திரைப்படம், பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றிருக்கிறது.
இதனை தியேட்டரில் வெளியிடத்தான் ப்ரியதர்ஷன் முடிவு செய்திருந்தார். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் அது சாத்தியமில்லை என்று கருதி இன்று நெட்பிளிக்ஸ் இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். கட்டணம் செலுத்தி டவுண்ட்லோட் செய்து படத்தை பார்க்கலாம். இதற்கு முன்பும் ஒரு சில தமிழ் படங்கள் நெட்பிளிக்சில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.