இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வரும் படம் டிராபிக் ராமசாமி. தனியொரு மனிதனாக சமுதாயத்துக்காக சட்டத்தின் துணையுடன் போராடி வரும் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை கதை, இதில் டிராபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். அவரது மனைவியாக நடிக்க பல முன்னணி நடிகைகளிடம், முன்னாள் நடிகைகளிடம் பேசப்பட்டது. பலரும் மறுத்துவிட்ட நிலையில் துணிச்சலுடன் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார் ரோகினி.
இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன்பாப், இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள். பாலமுரளி பாலு இசை அமைக்கிறார், விஜய் ஆண்டனி கவுரவ வேடத்தில் நடித்து வருகிறார் விக்கி இயக்குகிறார்.