இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தனுஷ், வெற்றிமாறன் இணைந்து தயாரித்த படம் - 'காக்கா முட்டை'. இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். விக்னேஷ், ரமேஷ் என்ற இரண்டு சிறுவர்களை முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், அவர்களுக்கு அம்மாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார்.
சிறந்த குழந்தைகள் படத்துக்கான தேசிய விருதை இந்தப் படம் பெற்றது. அதன்பிறகு 'கிருமி' என்ற படத்துக்குக் கதை எழுதிய மணிகண்டன், அடுத்து விதார்த் நடித்த 'குற்றமே தண்டனை', விஜய்சேதுபதி நடித்த 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்களை இயக்கினார்.
ஆண்டவன் கட்டளை படத்துக்குப் பிறகு 'கடைசி விவசாயி' என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார் மணிகண்டன். அந்தப் படத்தில் ரஜினி நடிப்பதாக தகவல்கள் அப்போது அடிபட்டது. பின்னர், ரஜினி கடைசிவிவசாயி படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியானது.
இந்நிலையில், 'கடைசி விவசாயி' படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஜுங்கா, மாமனிதன் படங்களுக்குப் பிறகு கடைசி விவசாயி படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார் விஜய்சேதுபதி.