டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஹாலிவுட்டின் பிரம்மாண்டமான படைப்பான 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் சுமார் 2000 தியேட்டர்களில் இந்தியாவில் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் வெளிவந்த 'பாகுபலி 2' படத்தை விடவும் 'அவெஞ்சர்ஸ்' வெளியான தியேட்டர்கள் அதிகம் என்கிறார்கள்.
இப்படத்தின் முதல் நாள் வசூல் நிகர வசூல் 31 கோடியைத் தொட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். மொத்த வசூல் 40 கோடியாம். இன்றும் நாளையும் இந்தப் படம் பெரும்பாலான தியேட்டர்களில் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால் இன்னும் இரண்டு நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்துவிட வாய்ப்புள்ளது.
இந்தியாவில் இதற்கு முன் வெளியாகி பெரிய வசூலைப் படைத்த ஹாலிவுட் படங்களான “அவதார், 2012, பாஸ்ட் அன்ட் பியூரியஸ், அவெஞ்சர்ஸ், ஜங்கிள் புக்” ஆகிய படங்களை விடவும் இந்த 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படம் புதிய வசூல் சாதனை படைக்கும் என்கிறார்கள்.
இந்த 2018ம் வருடத்தில் 3500 தியேட்டர்களில் வெளியான 'பத்மாவத், பாகி 2' ஆகிய படங்களை விட 1500 தியேட்டர்கள் குறைவாக வெளியான 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படத்தின் வசூல் அந்தப் படங்களுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாகவே இருக்கிறது.