ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2017ம் ஆண்டில் தெலுங்குத் திரையுலகத்தில் ரூ.50 கோடிக்கு வசூலித்து பெரிய வெற்றி பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. இப்படத்தின் வசூல் இந்தியத் திரையுலகினரை வியக்க வைத்தது. இப்படத்தின் ரீமேக்கை உடனடியாக வாங்கி தமிழில் 'வர்மா' என்ற பெயரில் பாலா இயக்க ஆரம்பித்துவிட்டார். விக்ரம் மகன் துருவ் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இப்போது இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க ஷாகித் கபூர் சம்மதித்துவிட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ரீமேக் உரிமைக்காகப் பலரும் போட்டி போட்டார்கள். கடைசியில் 7 கோடி ரூபாய்க்கு இப்படத்தின் ஹிந்தி உரிமை விற்கப்பட்டது. சாதாரணமாக 2 அல்லது மூன்று கோடி ரூபாய் தான் விலை போகும். ஆனால், படம் பெரிய வெற்றி பெற்றதால் தயாரிப்பாளர்கள் அந்த விலையைக் குறைக்கவில்லை என்கிறார்கள்.
தெலுங்கில் படத்தை இயக்கிய சந்தீப் வங்கா தான் ஹிந்தி ரீமேக்கையும் இயக்கப் போகிறாராம். ஹிந்திக்காக கதையில் சில மாற்றங்களை செய்ய உள்ளார்கள். படத்தில் நாயகியாக நடிக்கும் நாயகி தேர்வும் நடந்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.