பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மோகன்லால் நடிப்பில் தற்போது பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் ஒடியன்'. அறிமுக இயக்குனர் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப்பத்தில் ஒடியன் மாணிக்யன் என்கிற பிளாக் மேஜிசியனாக நடித்துள்ளார் மோகன்லால்..
சுமார் 123 நாட்கள் நடைபெற்ற இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.. 'புலிமுருகன்' படத்திற்கு அடுத்தபடியாக மோகன்லால் அதிக நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி நடித்தது இந்தப்படத்தில் தான்..
அதேசமயம் இந்தப்படத்தின் ஒவ்வொரு கட்ட படப்பிடிப்பின் இடைவெளியின்போதும் உருவான 'நீராளி' என்கிற இன்னொரு படத்தில் மோகன்லால் ஏற்கனவே நடித்து முடித்துவிட்டார். ஆனால் இதன் மொத்தப்படப்பிடிப்புமே 36 நாட்களில் முடிவடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.