வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் 'விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன்' நிறுவனம் தயாரித்துள்ள படம் காளி. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக, அஞ்சலி, சுனைனா, அம்ரிதா ஆகியோர் நடிக்கின்றனர்.
'காளி' படத்தை மே 18-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார் விஜய் ஆண்டனி. அதனை தற்போது அதிகாரபூர்வமாகவே அறிவித்துள்ளார்கள். இந்த தேதிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒப்புதல் கொடுத்துவிட்டதாகவும் தகவல் அடிபடுகிறது.
விஜய் ஆண்டனி நடிப்பில் இதற்கு முன் வெளியான 'அண்ணாதுரை' படம் ரசிகர்களிடம் எதிரபார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. எனவே அந்தப்படத்தை வாங்கி நஷ்டப்பட்ட விநியோகஸ்தருக்கு சுமார் 5 கோடி திருப்பிக் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.
ஏற்கெனவே ரஜினி நடித்த படத்தின் டைட்டிலில் உருவாகியுள்ள இந்த 'காளி'படமும் பழைய காளி படம் போலவே ஆக்ஷன் கலந்த படமாக உருவாகியுள்ளது.