ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு இப்போது நடந்து வருகிறது. அஞ்சலி, த்ரிஷா இருவரும் கதாநாயகி வாய்ப்பைப் பெற கடுமையான முயற்சிகள் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று தகவல் அடிப்பட்டது. தற்போது அது உறுதியாகி இருக்கிறது. விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார இல்லை வேறு முக்கியமான கேரக்டரை ஏற்கிறாரா என்பது குறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. ஆனாலும் இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பது வில்லன் பாத்திரம் தான் என்று உறுதியாக சொல்லப்படுகிறது.
அதேநேரம், ரஜினியின் தம்பியாக விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் பரவிவருகிறது.