ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
அஜித்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் ஆண்டுதோறும் அமர்க்களப்படுத்தி வருகிறார்கள். அஜித் நடித்த சில படங்கள் அவரது பிறந்த நாளன்று வெளியாகி வந்தன. ஒருவேளை படங்கள் ரிலீஸாகவில்லை என்றாலும் அவர் சம்பந்தப்பட்ட பட போஸ்டர்கள், டீஸர்கள், டிரைலர்கள் போன்றவைகள் கூட வெளியாகும்.
இந்த ஆண்டும் அஜித் பிறந்த நாள் அன்று அவரது படம் வெளியாகவில்லை. அவர் படம் சம்பந்தப்பட்ட எந்த விஷயங்களும் வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
அதனால் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'விவேகம்' திரைப்படம், மே-1ஆம் தேதி முன்னணி சேனலில் காலை 11 மணிக்கு 'விவேகம்' ஒளிபரப்பாகவிருக்கிறது.
இதனிடையே விஜய், ரஜினி படங்களை அடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிகர் அஜித், நடிக்க ஒப்புக்கொண்டு இருப்பதாகவும், இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.