இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'விஜய்-62' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தமிழ் சினிமா ஸ்டிரைக் காரணமாக படவேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் பல படங்களின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளன. இந்நிலையில் 'விஜய்-62' படத்தின் ஷூட்டிங் சென்னையிலுள்ள ஆச்சி ஹவுசில் மீண்டும் துவங்குகிறது.
தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில், வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் ராதாரவி, பழ கருப்பையா, யோகி பாபு நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து வருகிறார். 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸும், விஜய்யும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது.
ரூ.100 கோடியில் ஏ.ஆர். முருகதாஸ் சம்பளம் ரூ.25 கோடி விஜய் சம்பளம் ரூ.40 கோடி, கீர்த்திசுரேஷ் சம்பளம் ரூ.1 கோடி, ஏஆர்.ரகுமான் சம்பளம் ரூ.4 கோடி. எஞ்சிய 30 கோடியில் தான் படம் தயாராகிறது.