'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முன்பெல்லாம் நடிகைகளுக்கு ஒரு தேசிய விருது வாங்க வேண்டும் என்பது லட்சியமாக இருக்கும், அதன் பிறகு ரஜினியுடன் நடித்துவிட வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் ஒரு படத்திலாவது பேயாக நடித்து விட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
நயன்தாராவிலிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் வரை பேயாக நடித்து விட்டார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் சாந்தினி. சிறுபட்ஜெட் படங்களின் ஆதர்சன நாயகியான சாந்தினி, அடுத்து ஐல என்ற படத்தில் பேயாக நடிக்கிறார். ஐஸ்வர்ய லட்சுமி என்பதின் சுருக்கமே படத்தின் டைட்டில். ஐஸ்வர்ய லட்சுமியாக டைட்டில் கேரக்டர் சாந்தினி நடிக்கிறார்.
அறிமுக இயக்குனர் ஆர்.வி.சுரேஷ் இயக்குகிறார். ரியங்கா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் தயாரிக்கின்றனர். தம்பி உன்னி கிருஷ்ணன் ஏற்கனவே மம்மூட்டி, ரேவதி, சிவகுமார் மற்றும் முன்னனி நடிகர்களை வைத்து தமிழ், மலையாள படங்களை தயாரித்தவர்.
சாந்தினியுடன் எமன் படத்தில் வில்லனாக நடித்த அருள் டி.சங்கர் மற்றும் போராளி திலீபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரபல இசையமைப்பாளரிடம் உதவியாளராக இருந்து வரும் டி.ஆர்.கிருஷ்ண சேத்தன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
பிரபல ஒளிப்பதிவாளர் வெற்றியிடம் பணிபுரிந்த ஹேமந்த் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தின் பூஜை நேற்று மாமல்லபுரத்தில் நடந்தது. விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சென்னை, கேரளா மற்றும் ஐரோப்பா நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.