டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் சில வாரங்களுக்கு முன்பே சென்சார் செய்யப்பட்டுவிட்டது. ஏப்ரல் 27 அன்று வெளியிட படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்திருந்தார். ஆனால் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தினால் புதிய படங்கள் ரிலீஸ், படப்பிடிப்பு என அனைத்து பட வேலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. அதனால் எந்த புதிய திரைப்படங்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சினிமா வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது. அடுத்தடுத்து பல புதிய திரைப்படங்கள் வெளியாகவிருக்கும் நிலையில் காலா படத்தின் ரிலீஸை ஜூன் 7-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். இதனை இந்த படத்தை தயாரித்திருக்கும் நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
ஜூன் 15-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு அதற்கு ஒரு வாரம் முன்னதாகவே காலா வெளியாகவிருக்கிறது. காலாவின் ரிலீஸ் தேதியை சுமார் ஒன்றரை மாதங்கள் தள்ளிவைத்தது ஏன் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
காவிரி பிரச்சனையில் ரஜினி கருத்து சொன்னதால் கர்நாடகாவில் ரஜினி படத்தை ரிலீஸ் செய்யவிட மாட்டோம் என சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மே 12 அன்று நடைபெறும் கர்நாடகா சட்டசபை தேர்தலில் முடிவு மே 15 அன்று வெளியாகிவிடும்.
ஆகவே இதை கருத்தில் கொண்டு காலாவை கர்நாடகாவில் பிரச்சனையில்லாமல் ரிலீஸ் செய்ய முடியும் என்று ரஜினி நினைக்கிறாராம். அதன் காரணமாக காலாவை ஜூன் மாதம் ஒத்தி வைத்திருக்கிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது.