ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் நடைபெற்று வந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்து படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.. அந்தவகையில் அரவிந்த்சாமி, அமலாபால் நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படம் வரும் ஏப்-27ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் மம்முட்டி - நயன்தாராவை வைத்து இயக்கிய 'பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் ரீமேக் தான் இந்தப்படம்..
ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் பாஸ்கர் தி ராஸ்கல் படமும் ஏப்ரல் மாதத்தில் தான் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அதற்கு முன்னும் பின்னும் சித்திக் இயக்கிய லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் மற்றும் கிங் லையர் ஆகிய படங்களும் ஏப்ரலில் வெளியாகி வெற்றி பெற்றவை தான். ஆக சித்திக்கின் சென்டிமென்ட்படி பார்த்தால் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படமும் வெற்றிக்கனியை சுவைக்கும் என நம்பலாம்.