ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மறைந்த நடிகை சாவித்ரியின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் மகாநதி. தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தில் சாவித்ரி வேடத்திற்காக ஒவ்வொரு நாளும் 4 மணி நேரம் மேக்கப் போட்டு நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
அப்படத்தின் முதல் போஸ்டர் வெளியானபோது அச்சு அசல் சாவித்ரியாகவே இருந்தார் கீர்த்தி சுரேஷ். அதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தன. இந்நிலையில், தற்போது மகாநதி படத்தின் இன்னொரு போஸ்டரும் வெளியாகியிருக்கிறது. அதைப்பார்த்து, இந்த போஸ்டர், சாவித்ரியை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது போல் உள்ளது என்று சமூக வலைதளங்களில் கீர்த்தி சுரேஷின் தோற்றத்தை புகழ்ந்து வருகிறார்கள். இதனால் படம் இப்போதே வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.