Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம்

21 ஏப், 2018 - 20:22 IST
எழுத்தின் அளவு:

சினிமா ஸ்டிரைக்கிற்கு பிறகு பல அதிரடியான நடவடிக்கைகள் தமிழ் சினிமாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான ஒரு விஷயம் நடிகர்களின் சம்பளம் குறைப்பு தொடர்பானது.

இதுதொடர்பாக, நடிகர் சங்கத்தினர் சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆலோசனை செய்தனர். தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நடிகர்கள் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, ஆர்யா, கலையரசன், சுஹாசினி, கஸ்தூரி, நகுல், ஜிவி பிரகாஷ், பரத், கவுதம் கார்த்திக், கணேஷ் வெங்கட்ராம், கிருஷ்ணா உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றனர்.

இந்தக்கூட்டத்தில், படத்தயாரிப்பில் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை குறைப்பது மற்றும் நடிகர்கள் சம்பளம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, "திரைப்படத்தின் வருமானம், லாபத்தை வைத்து நடிகர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படும்; ஊதிய நிர்ணயம் விரைவில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அமல்படுத்தப்படும்" என்றார்.

நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது, தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கும் விஷயங்களுக்கு நடிகர் சங்கம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றார்.

Advertisement
"கரு - தியா" ஆனது"கரு - தியா" ஆனது ஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்தேன்: கமல் ஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு தீர்வு ...


வாசகர் கருத்து (15)

23 ஏப், 2018 - 07:26 Report Abuse
ArulKrish Appo Vijay, ajith, ellorukum kuchi Mitai, kiruvi Roti kedacha peruse....
Rate this:
navasathishkumar - MADURAI,இந்தியா
22 ஏப், 2018 - 12:39 Report Abuse
navasathishkumar இப்ப தான் பொறுப்பு அதிகமாகும் , சூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரத்திற்கு வருவார்கள் , சரி இது சரியான வருமானத்தை கணக்கிட எந்த அளவுகோல் வைத்து இருக்கின்றார்கள்.. நூறு கோடி செலவில் படம் எடுத்து 150 கோடி வசூல் செய்தால் 50 கோடி லாபம் என்றால் நடிகருக்கு எந்த சம்பளம் கிடைக்கும் நயன்தாரா சம்பளமே 5 கோடி என்றால் ரஜினி சம்பளம் 20 கோடி தரவேண்டும் இதை செலவில் தயாரிப்பாளர் காட்டி மீத முள்ளதை வரவாக எடுப்பாரா ? என்பது நடிகர்களுக்கு சிக்கல் தான், ஆனால் சிறிய நடிகர்கள் படம் 500 கோடி வசூலித்தால் அந்த நடிகருக்கு என்ன 10% என்றால் கூட விரைவில் அவருக்கும் பல கோடி பணம் கிடைக்கும், இதெல்லாம் நடை முறை சாத்தியமா? ஒத்துக்குவாங்களா சூப்பர் ஸ்டாருங்க? கண்டிப்பா இந்த சிஸ்டம் வராது, எதுக்கு சும்மா சீன போடுகிறார்கள் இந்த சினிமா காரர்கள், முதலில் செலவை குறைத்தல், டிக்கெட் விலையை 50 ருபாய்க்குள் திரை அரங்கில் கட்ட முடிந்தால் மட்டுமே இனி கூட்டம் வரவும் ..45 நாட்கள் எந்த ரசிகனும் சினிமா வராலேயே என்று வருந்தவில்லை , அதற்காக ஆதரவு கூட தெரிவிக்க வில்லை , நிர்மலா தேவி , காவிரி , ஐபிஎல் , இப்படி சுட, சுட செய்திகளுக்காக அமர ஆரம்பித்து விட்டார்கள் , அமேசான் போன்ற நிறுவனங்களும் 25, 50 என்று மொபைலில் கூவி, கூவி விற்க மக்களும் மாறிவிட்டார்கள் , Qube போட்டாலும், Ac போட்டாலும் 4k resolution tv, laptop, handheld டெவிஸ்ஸ் என்று டிஜிட்டல் மக்களை மாற்றி விட்டது , சிறுவர்கள் படங்களை 3 மணிநேரம் பார்ப்பதை விரும்புவது இல்லை எனவே எதிர்காலம் சினிமா இல்லை என்பதால் இந்த துறையினர் கவனமுடன் படங்களை சிறிய பட்ஜெட்டில் எடுத்து லாபம் பார்ப்பதே உத்தமம் .
Rate this:
22 ஏப், 2018 - 10:42 Report Abuse
SasiKumar சிவா சம்பளம் ஏறும் விஜய் சம்பளம் அடியில போகுமே ஐயோ பாவம்
Rate this:
22 ஏப், 2018 - 10:40 Report Abuse
SasiKumar அப்படினா ரஜினியை விட சேதுபதிக்கு சம்பளம் தூள் கிளப்புமே
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22 ஏப், 2018 - 08:48 Report Abuse
Srinivasan Kannaiya அப்போ படம் வெளி இட்டு வெற்றிகரமாக ஓடினால்தான் ஊதியம்...
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Sandakozhi 2
  • சண்டகோழி 2
  • நடிகர் : விஷால்
  • நடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி
  • இயக்குனர் :லிங்குசாமி
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film Rajabheema
  • ராஜபீமா
  • நடிகர் : ஆரவ்
  • இயக்குனர் :நரேஷ் சம்பத்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in