டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் நகுல் புதிதாக நடிக்கும் படத்திற்கு நான் ராஜா ஆகப்போகிறேன் என்று தலைப்பிட்டுள்ளனர். பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, காதலில் விழுந்தேன் படம் மூலம் ஹீரோவாக அவதரித்தவர் நடிகர் நகுல். அதன்பிறகு மாசிலாமணி, கந்தக்கோட்டை என அடுத்தடுத்து படங்கள் காலை வாரி விட்டதால் சிலகாலம் தமிழ்சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த நகுல் தற்போது புதிய படமொன்றில் கமிட் ஆகியிருக்கிறார். அவர் நடிக்கவிருக்கும் புதுப்படத்திற்கு நான் ராஜா ஆக போறேன் என பெயரிட்டுள்ளனர். இப்படத்தை டைரக்டர் பிரிதிவி இயக்குகிறார். வசனம் எழுதும் பணியை ஏற்றிருக்கும் ஆடுகளம் டைரக்டர் வெற்றிமாறன், அவ்வப்போது சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று சில காட்சிகளை இயக்கிக் கொடுத்து வருகிறாராம்.