'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்த் திரையுலகத்தில் ஸ்டிரைக் நடந்ததால் 'காலா' வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு, தற்போது ஜுன் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'காலா' வெளியீட்டால் பல தமிழ்ப் படங்கள் தடுமாற வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால், இனிமேல் பட வெளியீடு முறைப்படுத்தப்படும் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து அதை நடைமுறைப்படுத்தியும் விட்டது. இருந்தாலும் தெலுங்குத் திரையுலகத்தில் இன்னும் எந்த முறையும் இல்லாமல் இருக்கிறது.
மகேஷ் பாபு நடித்த 'பரத் அனி நேனு', அல்லு அர்ஜுன் நடித்த 'நா பேரு சூர்யா' ஆகிய படங்கள் 'காலா' வின் முந்தைய வெளியீட்டுத் தேதியால் சிக்கலில் இருந்தன. ஸ்டிரைக்கால் 'காலா' தள்ளிப் போனது, அந்தப் படங்களுக்கு வசதியாகிவிட்டது. நேற்று வெளியான 'பரத் அனி நேனு' நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இன்னும் இரண்டு வாரம் கழித்து வர உள்ள 'நா பேரு சூர்யா'வும் அப்படியே வெற்றி பெறும் என்று நம்புகிறார்கள்.
'காலா' வால் தமிழ்ப் படங்கள் தப்பிக்கிறதோ இல்லையோ, தெலுங்குப் படங்கள் தப்பித்துவிட்டது.