மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
11 ஆண்டுகளுக்கு முன் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகாவும் நடித்த படம் 'மொழி.' இத்தனை வருடங்களுக்குப் பிறகு தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.
ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'துமாரி சுலு' என்ற படத்தின் ரீ-மேக்கான இந்த படத்தில் ஜோதிகாவுக்கு ஜோடியாக விதார்த் நடிக்கிறார். தெலுங்கு நடிகையான லட்சுமி மஞ்சு முக்கிய வேடம் ஒன்றிளல் நடிக்கிறார்.
இந்தப் படத்துக்கு ஜேழதிகாவை குஷிப்படுத்துவதற்காக முதலில் உங்கள் ஜோ என்று தலைப்பு வைக்க திட்டமிட்டிருந்தனர். இந்த டைட்டிலை ஜோதிகா மிகவும் விரும்பிய நிலையில், அவரது கணவரான நடிகர் சூர்யா அந்த தலைப்பை வைக்க எதிர்ப்பு தெரிவித்ததோடு அனுமதி கொடுக்கவும் மறுத்துள்ளார்.
அதன்பிறகே இப்போது படத்திற்கு 'காற்றின் மொழி' என்று பெயர் சூட்டப்பட்டு அதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்த 'மொழி' படத்தில் இடம் பெற்ற பாடல் வரியை படத்திற்கு தலைப்பாக்கிவிட்டனர்.