ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட், ஹாலிவுட் என எல்லா சினிமா துறைகளிலுமே நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருந்து வருவதாக நடிகைகள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, இந்த விசயத்தில் பெரிய சுனாமியை ஏற்படுத்தி விட்டார். இதனால் ஒவ்வொரு நிமிடமும் அடுத்து யாருடைய பெயரை லீக் அவுட் செய்யப்போகிறாரோ என்று தெலுங்கு திரையுலகம் திக் திக் மனநிலையில் காணப்படுகிறது.
இந்நிலையில், நடிகை ரம்யா நம்பீசன் விடுத்துள்ள செய்தியில், பெண்களை படுக்கைக்கு அழைப்பது சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலுமே உள்ளது. குறிப்பாக, பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் சினிமாவில் இருந்து கெண்டுதான் இருக்கிறது. ஆனால் என்னிடம் இதுவரை யாரும் அந்த மாதிரி அணுகியதில்லை. அதேசமயம் எனது சக நடிகைகள் சிலர் அதுபற்றி சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
கலைத்துறையில் இந்த மாதிரி மட்டமான விசயங்கள் நடப்பதை அணுமதிக்கக்கூடாது. அதனால் இதை நடிகைகள் இன்னும் அம்பலப்படுத்த வேண்டும். இனிமேல் யாரும் நடிகைகளிடம் இந்த மாதிரி தவறான நோக்கத்துடன் நெருங்குவதை இதோடு நிறுத்த வேண்டும் என்கிறார் ரம்யா நம்பீசன்.