ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நயன்தாரா மலையாளத்தில் 'கோட்டயம் குர்பானா' என்கிற படத்தில் நடிப்பதாக ஓரளவு உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப்படத்தில் நயன்தாராவின் கேரக்டர் இதுவரை அவர் முற்றிலும் ஏற்று நடித்திராத ஒன்றாக இருக்கும் என கதாசிரியர் ஆர்.உன்னி கூறியுள்ளார். நானும் ரவுடி தான், டோரா ஆகிய படங்களில் ஓரளவு காமெடி காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தார்.
இந்த புதிய படத்தில் தனது தொழில்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வேடிக்கை கொண்டாட்டம் என படம் முழுக்க காமெடியில் இறங்கி அடிக்கும் கேரக்டராம் நயன்தாராவுக்கு. சமீபகால படங்களில் கதாநாயகியின் கேரக்டர் நாம் பார்த்திராத அளவுக்கு கேங்ஸ்டர் காமெடியாக இந்தப்படம் இருக்குமாம். அதுமட்டுமல்ல நயன்தாரா உட்பட படத்தில் அனைத்து கேரக்டர்களுமே கோட்டயம் பாஷையில் தான் பேசுகிறார்களாம்.