ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள நடிகர் உன்னி முகுந்தன். பாகமதி படத்தில் அனுஷ்காவின் ஜோடியாக நடித்தவர். இவர் நடித்துள்ள சாணக்ய தந்திரம் படம் வரும் ஏப்-25 ஆம் தேதி ரிலீஸாகிறது. சமீபத்தில் இந்தப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தனது பெற்றோரை வரும்படி சொல்லி இருந்தார்..
படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற உன்னி முகுந்தனின் பெற்றோருக்கு, யாரோ ஒரு பெண் தங்களிடம் வலிய வந்து அடிக்கடி பேச முற்படுவது கண்டு ஆச்சர்யப்பட்டார்களாம். ஆனால் தங்களை வரச் சொன்ன மகனை காணோமே என தேட, பின்னர்தான் தெரிந்ததாம், அந்த பெண் தான் தங்களது மகன் உன்னி முகுந்தன் என்று.
ஆம். சாணக்ய தந்திரம் படத்தில் சில காட்சிகளில் பெண் வேடத்தில் நடித்துள்ளார் உன்னி முகுந்தன். 'ஆடுபுலியாட்டம்' என்கிற ஹிட் படத்தை இயக்கிய கண்ணன் தாமரக்குளம் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.