இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற துமாரி சுலு படம், தமிழில் ரீமேக் ஆகிறது. வித்யாபாலன் நடித்த கேரக்டரில் ஜோதிகா நடிக்கிறார். அவரது கணவராக விதார்த்தும், தோழியாக லட்சுமி மஞ்சுவும் நடிக்கிறார்கள். ராதாமோகன் இயக்க, தனஞ்செயன் தயாரிக்கிறார்.
ஒரு சாதாரண குடும்பத்து பெண் நள்ளிரவு ரேடியோ ஜாக்கியாக பணிபுரிவது தான் படத்தின் கதை. வீட்டுக்குள் குடும்ப குத்துவிளக்காக இருப்பவர் நள்ளிரவு ரேடியோ ஜாக்கியாக இளைஞர்களுடன் கிளுகிளுப்பாக உரையாடும் முரண்பாடான வாழ்க்கை கதை. இந்த படத்தின் மூலம் மொழி படத்திற்கு பிறகு ஜோதிகாவும், ராதாமோகனும் இணைந்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் தலைப்பை யூகிக்க ஒரு போட்டியை நடத்தினார்கள். இரண்டு வார்த்தைகள் கொண்ட தலைப்பு, ஒரு வார்த்தை ராதாமோகன், ஜோதிகா தொடர்புடையது. இன்னொரு வார்த்தை ரேடியோ தொடர்புடையது என்று க்ளு கொடுத்திருந்தார்கள். இப்போது தலைப்பை அறிவித்திருக்கிறார்கள்.
காற்றின் மொழி என்பது படத்தின் டைட்டில். காற்றின் மொழி... என்று தொடங்கும் பாடல் மொழி படத்தில் இடம்பெற்றிருந்தது.