ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சவுதி அரேபியாவில், மதக் கட்டுப்பாடுகள் மீறப்படுவதாகக் கூறி 1980களின் துவக்கத்தில், சினிமாவுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது, சவுதியின் பட்டத்து இளவரசரான, முகமது பின் சல்மான், பெண்கள் வாகனம் ஓட்டுவது, விளையாட்டு போட்டிகளை நேரடியாக பார்க்க பெண்களுக்கு அனுமதி என பல விஷயங்களை செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் 35 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக சவுதியில் சினிமாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஏப்.,18 முதல் தியேட்டர் செயல்பட துவங்கி உள்ளது. முதல்படமாக ஹாலிவுட் படமான, பிளாக் பாந்தர் வெளியாகி உள்ளது.
ரியாத்தில் உள்ள மிகப்பெரில் மாலில் உள்ள தியேட்டரில் மன்னர் குடும்பத்தினர் பலரும் படத்தை ரசித்து பார்த்தனர். கலாச்சாரத்தை கருத்தில் கொண்டு பிளாக் பாந்தர் படத்தில் இருந்து முத்தக்காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியிடப்பட்டுள்ளது.
இன்னும் ஐந்து ஆண்டுகளில், சவுதியில் உள்ள, 15 நகரங்களில் மேலும் 40 தியேட்டர்கள் வரை திறக்கப்பட உள்ளது.