தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த ஒன்றரை மாதமாக தமிழ்த்திரையுலகில் நடந்து வந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. டிஜிட்டல் கட்டணம் சம்பந்தமாக நடைபெற்று வந்த இந்த வேலைநிறுத்தம், திரையுலகில் நடந்து வந்த பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டிருக்கிறது.
குறிப்பாக, டிக்கெட் கட்டணத்திற்காகவும் புதிய ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் படங்களுக்கேற்ப கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. ஜூன் 1-ந்தேதி முதல் இந்த புதிய டிக்கெட் கட்டணம் நடைமுறைக்கு வருகிறது.
அதோடு, சிறிய படங்கள், பெரிய படங்கள் என்கிற பாகுபாடில்லாமல் அனைத்து படங்களும் சென்சார் சான்றிதழ் பெறும் தேதி அடிப்படையில் வெளியாகயிருக்கும் நிலையில், தற்போது சிறிய படங்கள், பெரிய படங்கள் என்கிற அடிப்படையில் டிக்கெட் கட்டணத்தையும் குறைத்து ரசிகர்களை சிறிய படங்களை பார்க்க வைப்பதற்கான சூழலை உருவாக்கியுள்ளனர்.