டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மூடர்கூடம் படத்தை இயக்கியவர் நவீன். அதன் பிறகு சமுத்திரகனி நடிக்கும் கொளஞ்சி என்ற படத்தை தயாரிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் படம் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் உள்ளிட்ட நடிகர், நடிகைள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
அம்மா கிரியேஷன் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். சிவா தயாரிக்கும் 23வது படம் இது. படப்பிடிப்புகள் ஜூலை மாதம் தொடங்குகிறது. விஜய் ஆண்டனி தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ள காளி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். திமிருபிடிச்சவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.