ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கதாநாயகியாக அறிமுகமாகும் 'தடக்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மராத்தியில் வெளிவந்த 'சாய்ராட்' என்ற படத்தின் ரீமேக்காக இப்படம் தயாராகி வருகிறது. பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் தயாரிப்பில் சஷான்க் கைதான் இப்படத்தை இயக்கி வருகிறார். நாயகனாக இஷான் கட்டர் நடிக்கிறார்.
படப்பிடிப்பு நிறைவடைந்தது பற்றிய அறிவிப்பை தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார். இப்படம் ஜுலை 20ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் நாயகனாக நடித்துள்ள இஷான் கட்டர் பிரபல ஈரான் இயக்குனர் மஜித் மஜிதி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பியான்ட் த கிளவுட்ஸ்' படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜான்வியை நாயகியாக்கிப் பார்க்க வேண்டும் என்று மறைந்த நடிகை ஸ்ரீதேவி மிகவும் ஆசைப்பட்டார். ஆனால், அதைப் பார்க்க முடியாமலேயே அவர் மறைந்துவிட்டார்.