தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஹிந்தியை தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் வெற்றி பெற்றுள்ளது. தமிழில் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கினார். அவரே, அடுத்து பிக்பாஸ் - சீசன் 2 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த நிகழ்ச்சியை தற்போது மலையாளத்திலும் நடத்தவுள்ளனர். அதை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அவரையே, நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தொகுத்து வழங்க பேசி முடிப்பர் என கூறபப்டுகிறது. இதைத் தவிர, மலையாளப் படவுலகின் வேறு இரு முன்னணி நடிகர்களிடமும், நிகழ்ச்சி தயாரிப்பு குழுவினர் பேசி வருகின்றனர்.
மோகன்லால் தற்போது, மலையாலத்தில் 'லால்சலாம்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்தே, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவரை, நிகழ்ச்சித் தயாரிப்பு குழுவினர் தெரிவு செய்துள்ளனர்.