'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கில் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்ட வீரராக சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் தமன்னாவும் ஒரு புரட்சிகரமான வேடத்தில் நடிக்க உள்ளார்.
சைரா படத்தில் நடிப்பது குறித்து தமன்னா கூறியிருப்பதாவது... "சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் எனக்கு பிடித்த நடிகர்களான அமிதாப்பச்சன், சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடிப்பதை கவுரவமாக நினைக்கிறேன். இதுவரை அவர்களை திரையில் பார்த்து பிரமித்து போன நான் இப்போது அவர்களுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார் தமன்னா.