Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஸ்ரீதேவிக்கு தேசிய விருது வழங்கியதில் சர்ச்சை

16 ஏப், 2018 - 13:06 IST
எழுத்தின் அளவு:
National-award-to-Sridevi-begins-controversy

மாம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

"நியாயப்படி சிறந்த நடிகைக்கான விருது பார்வதி மேனனுக்கு வழங்க வேண்டும். அவருக்கு சிறப்பு விருது வழங்கிவிட்டு ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது வழங்கியது தவறு" என்ற கருத்து மேலோங்கி வருகிறது.

ஸ்ரீதேவி சிறந்த நடிகைதான் ஆனால் மாம் படத்தில் அவர் பெரிதாக நடிக்கவில்லை. நடிக்க அந்த கதையில் வாய்ப்பும் இல்லை. அவர் இறந்து விட்டார் என்பதற்காக அனுதாபத்தின் அடிப்படையிலேயே ஸ்ரீதேவிக்கு விருது வழங்கப்பட்டிருப்பதாக விமர்சித்து வருகிறார்கள்.

குறிப்பாக விருது கமிட்டித் தலைவர் சேகர் கபூரே "ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கொடுத்ததில் நியாயம் இல்லை என்று கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

ஸ்ரீதேவி சிறந்த நடிகைதான். ஆனால் மாம் படத்துக்காக அவருக்கு விருது வழங்கியதை ஏற்கமுடியாது என்று பேச்சு கிளம்பி இருக்கிறது. ஸ்ரீதேவி இறந்து விட்டதால் இந்த விருதை அவருக்கு வழங்குகிறார்கள் என்றும் விமர்சிக்கின்றனர். எனக்கும் ஸ்ரீதேவிக்கும் நல்ல நட்பு உண்டு. ஆனாலும் ஸ்ரீதேவிக்கு விருது வழங்கியதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தேர்வு குழுவினரிடம் சுட்டி காட்டி வந்தேன். ஸ்ரீதேவியை தேர்வு செய்வது மற்ற நடிகைகளுக்கு செய்யும் துரோகம் என்று கூறினேன். ஆனாலும் அவரை தேர்வு செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வரி மோசடி: சுஷ்மிதா சென்னுக்கு  எதிரான வழக்கு தள்ளுபடிவரி மோசடி: சுஷ்மிதா சென்னுக்கு ... வெளிநாடு செல்ல சல்மான் கானுக்கு அனுமதி வெளிநாடு செல்ல சல்மான் கானுக்கு ...


வாசகர் கருத்து (2)

srinivas - chennai,இந்தியா
17 ஏப், 2018 - 09:44 Report Abuse
srinivas இதை போன்ற சர்ச்சைகள் புதிது அல்ல. மீரா ஜாஸ்மின் சிறந்த நடிகை விரூது பெற்றார். அப்போது சரிதா நடித்த ஜூலி கணபதி முதல் இடம் பிடித்தது. சரிதா நடிப்புக்கு முன்னால் மீராவின் நடிப்பு இரண்டாம் பட்சம் தான். ஆயினும் ஜூலி கணபதி படம் தேர்வுக்கு அனுப்பப்படாததால் சரிதா பரிதாபமாக விருதினை இழந்தார். அக்னி சாட்சி, தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை போல பல முறை சிறந்த நடிகை விருதினை சரிதா இழந்தது துரதிர்ஷ்தமே...
Rate this:
Mohan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16 ஏப், 2018 - 13:52 Report Abuse
Mohan she might be in good books of bjp party. and she gone to national border and she have done wonderful war experience...she defeated our enemies... or she have given any good suggestion or any time ...she was any volunteers....god only can save this country
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in