Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரீ-ரிலீஸில் நாடோடி மன்னன் 25வது நாள்: காலத்தை வென்ற எம்.ஜி.ஆர்

15 ஏப், 2018 - 14:26 IST
எழுத்தின் அளவு:
Nadodi-Mannan-crossed-25-days-in-Re-release

தமிழ் சினிமாவின் ஒன்லி ஒன் சூப்பர் ஸ்டார் என்றால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தான். புதிய படங்களே இரண்டாவது வாரத்தை கடக்க தவிக்கும்போது 60 வருடங்களுக்கு பிறகு மறு வெளியீடு செய்யப்பட்ட நாடோடி மன்னன் 25வது நாளை கடந்து சாதனை படைத்திருக்கிறது.

1958ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “நாடோடி மன்னன்”. அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த திரைப்படமாக பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான்.

இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரும்.. திரைக்கதையை சி.கருப்புசாமி, கே.ஸ்ரீனிவாசன் மற்றும் ப.நீலகண்டன் ஆகியோரும் இணைந்து எழுதினார்கள்.

எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜாதேவி மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள். அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில், எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்தது. இப்படம் எம்.ஜி.ஆருக்கு 11 கோடி வசூலைக் குவித்தது மட்டுமல்லாமல், அவரது அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணை புரிந்தது.

இவ்வளவு பெருமைகளை உள்ளடக்கிய இத்திரைப்படம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பித்து வெளியிடப்பட்டது. எம்.ஜி.ஆர் ரசிகர்களின் ஆதரவோடு 25 நாட்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.

இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் சென்னை மாநகர மேயர் சைதை.துரைசாமி கலந்துகொண்டார். ஏராளமான எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கலந்துகொண்டார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நீண்டகால காத்திருப்பு சோர்வடைய செய்கிறது! -அரவிந்த்சாமிநீண்டகால காத்திருப்பு சோர்வடைய ... பாலுமகேந்திரா நூலகம் திறப்பு பாலுமகேந்திரா நூலகம் திறப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

V Gopalan - Bangalore ,இந்தியா
15 ஏப், 2018 - 16:01 Report Abuse
V Gopalan It is very much important for the general public because all are well off and needs entertainment at this juncture.
Rate this:
Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா
15 ஏப், 2018 - 15:21 Report Abuse
Adhvikaa Adhvikaa அவர்தான் எம் ஜி ஆர்.
Rate this:
s t rajan - chennai,இந்தியா
15 ஏப், 2018 - 14:49 Report Abuse
s t rajan எம் ஜீ ஆரின் நாடோடி மன்னன், மதுரை வீரன், "தா" சீரிஸில் சில படங்கள், பணம படைத்தவன், ஆயிரத்தில் ஒருவன், திருடாதே, படகோட்டி, பெற்றால் தான் பிள்ளையா, ஒளி விளக்கு எங்க வீட்டு பிள்ளை போன்ற படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Ispet rajavum idhaya raniyum
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  Tamil New Film Monster
  • மான்ஸ்டர்
  • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
  • நடிகை : பிரியா பவானி சங்கர்
  • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in