தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் மெர்குரி. தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் சுமார் ஆயிரம் தியேட்டர்களில் மெர்குரி வெளியாகிறது.
இதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் விடுத்துள்ள ஒரு செய்தியில், இன்றைய தினம் மெர்குரி படத்தை வெளியிட நினைத்திருந்தேன். ஆனால் ஸ்டிரைக் காரணமாக என் மண்ணை தவிர மற்ற மற்ற ஊர்களில் என் படம் ரிலீசாகியிருக்கிறது. எனது மண்ணில் என் படத்தை வெளியிடக்கூடிய சூழல் அமையாதது மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது.
கூடிய சீக்கிரமே எல்லா பிரச்சினைகளும் முடிந்து படம் பார்வைக்கு வந்து விடும். அதுவரைக்கும் பொறுத்திருங்கள். தயவுசெய்து யாரும் பைரஸி இணையதளங்களில் மெர்குரி படத்தை பார்க்காதீர்கள். இது நான் உங்களிடம் வைக்கும் பணிவான வேண்டுகோள் என்று கூறியுள்ளார்.