Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வித்யாபாலன் அளவுக்கு நான் தயாராகவில்லை! அசின்

25 மார், 2012 - 09:12 IST
எழுத்தின் அளவு:

டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்த நடிகை வித்யா பாலன் அளவுக்கு நான் தயாராகவில்லை என்று நடிகை அசின் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அசின், இந்தி கஜினி மூலம் பாலிவுட் திரையுலகிற்கு சென்றார். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தும் பெரிதாக அசினால் அங்கு பளிச்சிட முடியவில்லை. தமிழ் சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என்று கூறி வந்த அசின், காவலன் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்தார். பின்னர் மீண்டும் பாலிவுட்டில் வாய்ப்பு வேட்டைகளில் பிஸியாகி விட்டார். தற்போது பாலிவுட்டில் அபிஷேக் பச்சன் மற்றும் அஜய்தேவ்கன்னுடன் நடித்து வரும் அசின் தமிழ்படங்களில் தலைகாட்டுவதே இல்லை.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பாலிவுட் படங்களிலேயே நான் கவனம் செலுத்திக்கொண்டிருப்பதாக வரும் தகவல்கள் உண்மையானது அல்ல. தென்னிந்திய அளவில் நான் ஒரு பிரபலமான நடிகை என்றாலும், பாலிவுட்டைப் பொறுத்த வரையில் நான் இன்னும் புதுமுக நடிகைதான். தென்னிந்திய படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. நல்ல ஸ்கிரிப்டை தேடிக்கொண்டிருக்கிறேன். நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் கண்டிப்பாக தமிழில் நடிப்பேன். சினிமாவில் யாரும் யாருக்கும் போட்டியாளர்கள் இல்லை. இங்கே அனைவரும் தங்களது திறமையான நடிப்பால் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது மட்டுமின்றி, நிலைநிறுத்திக் கொள்கிறார்கள், என்று கூறியுள்ளார்.

டர்ட்டி பிக்சர் படத்தில் வித்யாபாலன் நடித்தது போல் நீங்களும் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அசின், டர்ட்டி பிக்சரில் வித்யா பாலன் நடித்ததைப் போல் என்னால் நடிக்க முடியாது. நான் இன்னும் அதுபோன்ற கேரக்டர்களில் நடிக்கும் அளவிற்கு தயாராகவில்லை, என்று கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

கத்தியா பாலன் - veena ponaval kurukku theru,இந்தியா
26 மார், 2012 - 08:54 Report Abuse
 கத்தியா பாலன் வித்யாபாலன் ரேஞ்சுக்கு அசின் யோசிக்கிரப்பவே தெரியுது இப்ப இன்னா நிலைமைல இருக்கணு...ஹி ஹி ஹி....
Rate this:
வெள்ளலூர் நாடு - madurai,இந்தியா
25 மார், 2012 - 16:59 Report Abuse
வெள்ளலூர் நாடு பெரிய நாடிய பேரொளி பத்மினி... ஆட தெரியாதவ தெரு கோணல் என்றாலம்... போடி மொக்க...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in