ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த மாதம் வெளிவந்த தெலுங்கு படம் நீடி நாடி ஒக்க கதா. ஸ்ரீவிஷ்ணு, சாத்னா டைட்டஸ், நாரா ரோகித், தேவி பிரசாத் உள்பட பலர் நடித்திருந்தனர். சுரேஷ் பொம்மலி இசை அமைத்திருந்தார், ராஜ் தோட்டா ஒளிப்பதிவு செய்திருந்தார். வேணு உடுகலா இயக்கி இருந்தார். இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், அதில் கார்த்தி நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாது. இதனை கார்த்தி மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
நான் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறேன். எனது முழு கவனமும் அந்தப் படத்தில் இருக்கிறது. விரைவில் இதன் படப்பிடிப்புகள் முழு வீச்சில் நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் நீடி நாடி ஒக்க கதா தெலுங்கு ரீமேக்கில் நான் நடிப்பதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை. இது தொடர்பாக அந்தப் படத்தின் இயக்குனர் என்னை சந்திக்கவும் இல்லை. அந்த செய்திகள் தவறானதாகும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.