இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஹரஹர மஹாதேவகி படம் வசூலை குவித்ததால், தற்போது கோலிவுட்டில், அதேபோன்ற கதையம்சம் உள்ள, 'அடல்ட்' காமெடி படங்களுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. அந்த வரிசையில், இப்போது, கஜினிகாந்த் என்ற படம் தயாராகி வருகிறது.
இதில், ஆர்யா ஹீரோவாகவும், வனமகன் படத்தில் நடித்த சாயீஷா, ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். வனமகன் படம், எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்றாலும், அதில் நடித்த சாயீஷா, இப்போது சத்தமில்லாமல், தமிழ் ஹீரோ மற்றும் இயக்குனர்களின், மனம் கவர்ந்த நடிகையாக உருவெடுத்து வருகிறார்.
ஜுங்கா, கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த் ஆகிய மூன்று படங்களில், தற்போது அவர் நடித்து வருகிறார். 'ஆர்யா, இப்போது, 'டிவி' நடிகராகி விட்டார்' என, பரவலாக பேசப்பட்டு வருவதால், தன் ஹீரோ அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வதற்காக, இந்த படத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறாராம்.