பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கோலிவுட்டில் அறிமுகமான புதிதில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர், கீர்த்தி சுரேஷ். அதற்கு ஏற்ப, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் ஒப்பந்தமானார். ஆனால், எதிர்பார்த்த அளவு, அவருக்கு வரவேற்பு இல்லை. இதனால், படங்கள் எண்ணிக்கை குறைந்தது.
இதையடுத்து, வெளிவரஉள்ள படங்களை பெரிதும் எதிர்பார்த்துள்ளார். இதில், விக்ரமுடன் நடிக்கும், சாமி - 2 படமும் ஒன்று.
கட்டாய வெற்றியை எதிர்பார்த்து நீண்ட நாட்களாக காத்திருக்கும் விக்ரமும் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார். படப்பிடிப்பின் பெரும்பகுதி முடிந்த நிலையில், விரைவில் வெளியாக காத்திருக்கிறது, சாமி - 2. கீர்த்தியையும்,விக்ரமையும், சாமி கரை சேர்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.