தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
“வீரம், வேதாளம், விவேகம்” ஆகிய படங்களுக்குப் பிறகு சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படம் 'விசுவாசம்'. இப்படத்திற்காக ஐதராபாத்தில் பிரம்மாண்டமான அரங்குகள் தயாராக உள்ளன. அங்கு படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் ஒரு பக்கம் தகவல் வெளியானது.
இந்நிலையில் நடிகர் ஆர்.கே.சுரேஷ், இயக்குனர் சிவாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை அவருடைய டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். அந்த டுவிட்டருக்கு அஜித் ரசிகர்களிடமிருந்து ஒரு பக்கம் பாராட்டு இருந்தாலும் மறுபக்கம் கடுமையான திட்டுக்களும் விழுந்தது.
அந்த திட்டுக்கள் அனைத்தும் சுரேஷுக்கு அல்ல, இயக்குனர் சிவாவுக்கு. திட்டிய அனைவருமே சிவாவை தரக்குறைவான வார்த்தைகளால் தான் திட்டித் தீர்த்தார்கள். படத்தை ஒழுங்காக எடுக்கச் சொல்லுங்கள், படம் பற்றி அடிக்கடி அப்டேட் கொடுக்கச் சொல்லுங்கள், படம் நன்றாக வரவில்லை என்றால் அவ்வளவுதான் என கமெண்ட்டில் பதிவிட்டுள்ளார்கள்.
இயக்குனர் சிவாவுக்கு 'விசுவாசம்' பற்றி தயாரிப்பாளரோ, அஜித்தோ தரும் அழுத்தத்தை விட அஜித் ரசிகர்கள் தரும் அழுத்தம்தான் அதிகமாக இருக்கும் போலிருக்கிறது.