துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
தமிழில் சுஜிலீக்ஸ் போன்று தெலுங்கில் ஸ்ரீரெட்டி லீக்ஸ் பரபரப்பாகி உள்ளது. வாய்ப்புக்காக நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகளை அம்பலப்படுத்தி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.
நடிகர் ராணாவின் தம்பி அபிராமும், ஸ்ரீரெட்டியும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியான நிலையில், அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநர் கோனா வெங்கட்டின் பெயர் ஸ்ரீரெட்டி லீக்ஸில் இடம்பெற்றது. இருவரும் வாட்ஸ்ஆப்பில் சாட் செய்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை, கோனா வெங்கட் மறுத்துள்ளார். "ஒரு நடிகை சினிமா உலகில் உள்ள பிரபலங்கள் பற்றியும் என்னை பற்றியும் தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு, சம்பந்தப்பட்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என் மீதான புகாரை சட்டப்படி சந்திப்பேன்" என டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.