Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போராட்டங்கள் சரியா...? - அரவிந்த்சாமி கருத்து

12 ஏப், 2018 - 16:36 IST
எழுத்தின் அளவு:
Aravindswamy-tweet-about-Two-days-Protest

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் காவிரி போராட்டங்கள் பற்றி பலரும் தொடர்ந்து கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், திரைப் பிரபலங்கள், தனி நபர்கள் என பலரும் பலவிதமான கருத்துக்களை முன் வைக்கிறார்கள். அனைவரது கருத்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதைப் பற்றியே இருக்கிறது.

ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த போராட்டம் குறித்து ஐபிஎல் ரசிகர்கள் பலர் போட்டியை பார்த்தே தீருவோம் என்றார்கள். அவர்களுக்கு கடும் கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பலர் தெரிவித்தார்கள். இதனிடையே, நடிகர் அரவிந்த் சாமி கடந்த இரண்டு நாட்களில் நடந்த போராட்டங்களைப் பற்றி அவருடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதில், “2 நாட்களில் 2 எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடந்தன. ஒன்றிற்கு எதிர்மறையான விளம்பரம் கிடைத்தது. நமது சொந்த மக்களையும் பாதித்தது. ஒரு உணர்ச்சிகரமான சூழலையும் உருவாக்கியது. மற்றொன்று உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. ஒரு நோக்கத்திற்காகவும், தேவைக்காகவும் அது இருந்தது. எதிர்காலத்தில் எது சிறந்ததாக இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.

அவர் பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்டியதை ஆதரித்து இந்த பதிவை போட்டுள்ளாரா ?.

Advertisement
விஜய்யின் அரசியல் பிரவேசம் எப்போது?விஜய்யின் அரசியல் பிரவேசம் எப்போது? தமிழ்நாட்டில் மட்டும் வெளியாகாத 'மெர்க்குரி' தமிழ்நாட்டில் மட்டும் வெளியாகாத ...


வாசகர் கருத்து (4)

SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
12 ஏப், 2018 - 21:01 Report Abuse
SIVA. THIYAGARAJAN அரவிந்தர் கருத்து ஏற்புடையதே>>>>>>
Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
12 ஏப், 2018 - 20:21 Report Abuse
SIVA. THIYAGARAJAN இனிவரும் காலங்களில் போராட்டத்திற்கு தடை விதித்தால் ஒழிய யாரும் ஆட்சி செய்ய பார்க்க மாட்டார்கள் அந்த அளவிற்கு மக்கள் மனதை ஆட்சியர்கள் உண்டாக்கி விட்டார்கள். மேலும் ஊடகங்களும் தூண்டு கோலாக விளம்பர உதவிசெய்வதால் போராட தூண்டுகின்றன என்றே கூறலாம்.
Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
12 ஏப், 2018 - 20:16 Report Abuse
SIVA. THIYAGARAJAN நம் நாட்டை அன்னியன் ஆள வில்லை .எல்லோரும் இந்நாட்டு மக்கள் தான். உடன்பிறவா சகோதர சகோதரிகளாகவே பார்க்கனும். போராட்டம் என்பது சிறந்த விவேகம் அல்ல .பொராமை உள்ளம் என்றுதான் கொள்ள வேண்டும். கொடு என்று போராடுவதும் வேண்டாம் என்று போராடுவதும் சிறு பிள்ளைதனமான செயலாக படுகிறது. எனவே சட்டப்படி எல்லோரும் வாழநினைப்பதே ஜனநாயகம் .எதற்கெடுத்தாலும் எதிரி போல் எதிர் கட்சிகள் எதிர்ப்பது அவர்களுக்கு நன்மை பயக்காது தனக்கு வந்தால் தலைவலி என்பது ஞாயமற்ற எண்ணமாகும். பரந்த மனம் பண்பை தரும்.பாரதம் போற்றும். பகைமை கூடாது>>>>>
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
12 ஏப், 2018 - 20:09 Report Abuse
BoochiMarunthu அந்த முதல் போராட்டம் நடக்கவில்லை என்றால் எல்லாரும் இந்நேரம் IPL இல் மூழ்கியிருப்பார்கள் . ரெண்டாவது போராட்டமே நடந்து இருக்காது .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Chekka Chivantha Vaanam
  Tamil New Film 96
  • 96
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : த்ரிஷா
  • இயக்குனர் :பிரேம்குமார்
  Tamil New Film MGR
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in