ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தெலுங்கில் 'மகாநதி' என்ற பெயரிலும், தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. இப்படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். மேலும் சமந்தா, விஜய் தேவரகொண்டா, மோகன்பாபு, பிரகாஷ் உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.
சமந்தா, மதுரவாணி என்ற பத்திரிகை நிருபராக நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரத் தோற்றத்தை கடந்த வாரம் வெளியிட்டார்கள். இரு தினங்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டாவின் கதாபாத்திரத் தோற்றத்தை வெளியிட்டுள்ளார்கள். ஒரு பழைய ஸ்கூட்டரில், அந்தக் கால ஆடையுடன், தோளில் யாஷிகா கேமராவுடன் காட்சியளிக்கும் விஜய்யின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் அவருடைய பெயர் விஜய் ஆண்டனியாம். அவரும் சமந்தாவும் படத்தில் காதலர்கள் என்கிறார்கள்.
ஒரு நடிகையின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சமந்தா, விஜய்யின் காதல் காட்சிகளும் படத்தில் உள்ளது என்கிறார்கள். இப்படம் மே 9ம் தேதி வெளியாக உள்ளது.