தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2012 ஆம் ஆண்டு வெளியான 'மதுபானக்கடை' என்ற படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. வணிகரீதியில் அந்தப்படம் வெற்றிப்படம் இல்லை என்றாலும், மதுவின் தீமையை பொட்டில் அடித்தது போல் சொன்ன படம் அது.
ரபீக், ஐஸ்வர்யா, என்.டி.ராஜ்குமார், 'பூ' ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வேத் சங்கர் இசையமைத்திருந்தார். மதுபானக்கடை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கமலக்கண்ணன்.
சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் கமலக்கண்ணன். இந்தப் படத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடிக்கிறார். அருவி, மாநகரம் போன்ற தரமான படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.