தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மாஜி மலையாள நடிகை பிரமிளா ஜோஷி, கன்னட நடிகர் சுந்தர் ஆகியோரின் மகள் மேக்னா ராஜ். தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு நந்தா நந்திதா, உயர்திரு 420, கிருஷ்ண லீலை படங்களில் நடித்தார். தமிழில் குறைவான படங்களில் நடித்தாலும் கன்னடத்தில் பிசியான நடிகை ஆனார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.
கன்னடத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது உடன் நடித்த சிரஞ்சீவி சார்ஜாவுடன் காதல் வயப்பட்டார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இப்போது இருவரது காதலுக்கும், கல்யாணத்துக்கும் இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள். இதைத் தொடர்ந்து மேக்னாராஜ், சிரஞ்சீவி சார்ஜா நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
திருமணம் வருகிற மே மாதம் 2ந் தேதி பெங்களூருவில் நடக்கிறது. அதில் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். மணமகன் சிரஞ்சீவி சார்ஜாவும் வாரிசு நடிகர் தான். இவர் பிரபல கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் மகன் ஆவார். இவரது சகோதரர் துருவா சார்ஜாவும் சினிமாவில் நடித்து வருகிறார்.