ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காதல் திருமணம் செய்து ஆதர்ஷ தம்பதிகளாக வாழ்ந்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரபல மலையாள நடிகர் திலீப்பும், நடிகை மஞ்சு வாரியரும். முறைப்படி விவாகரத்து வாங்கிவிட்டார்கள். ஆனாலும் கூட திலீப் ரசிகர்கள் மஞ்சு வாரியரை இப்போதும் எதிரி மனப்பான்மையுடன் தான் பார்க்கிறார்கள். அதனாலேயே இவர்கள் இருவரும் நடிக்கும் படங்களை கூட ஒரே நாழி ரிலீஸ் செய்வதை தயாரிப்பாளர்கள் தவிர்க்க பார்க்கிறார்கள்.
ஆனாலும் வரும் சித்திரை விஷு கொண்டாட்டமாக திலீப் நடித்துள்ள 'கம்மார சம்பவம்' மற்றும் மஞ்சு வாரியர் நடித்துள்ள 'மோகன்லால்' ஆகிய படங்கள் ஏப்-14ல் ஒரே நாளில் ரிலீஸாகின்றன. இதனால் மலையாள திரையுலகில் ஒரு பரபரப்பு உருவாகியுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன் இதேபோல ஒரேநாளில் வெளியான திலீப்பின் '2 கண்ட்ரீஸ்' படமும் மஞ்சு வாரியர் நடித்த 'ஜோ அன்ட் தி பாய்' என்கிற படமும் ஒரே நாளில் வெளியாகின. இதில் திலீப் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றது.